Showing posts with label BE BOLD. Show all posts
Showing posts with label BE BOLD. Show all posts

Wednesday, 26 October 2016

50க்கு அருகில் உள்ள எண்களை பெருக்குவது எப்படி?


 50 என்பது 100/2 இதனை முதலில் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். மற்றவை எல்லாம் அதே உத்திதான். அதாவது 100க்கு அருகில் உள்ள எண்களுக்கு எந்த உத்தியை பயன்படுத்தினோமோ, அதையே செய்துவிட்டு, இரண்டால் வகுத்துவிட வேண்டும். ஒரு உதாரணத்தை பார்க்கலாமா?


 உதாரணம் -1 63 67 X -------- 4221 --------

 குறிப்பு :- 1.    அடிப்படை எண் 50 2.    இரு எண்களுமே 50ஐ விட பெரிய எண்கள் என்பதால் அந்த எண்களில் இருந்து 50ஐ கழிக்கப்போகின்றோம் ·       அடிப்படை எண் 50 ·       63லிருந்து 50ஐ கழித்தால் +13 ·       67லிருந்து 50ஐ கழித்தால் +17 ·       13ஐயும் 17ஐயும் பெருக்கினால் விடை 13X17 = 221. இது விடையின் முதல் பகுதி. ·      


 63டன் 17ஐ கூட்டினால் 63+17 = 80. அல்லது 67டன் 13ஐ கூட்டினால் 67+13 = 80. ·       80ஐ 100ஆல் பெருக்குங்கள். 80 x 100 = 8000 ·       2ஆல் வகுங்கள். 8000 / 2 = 4000 இது விடையின் இரண்டாம் பகுதி ·      


 இனி விடையின் முதல் பகுதியையும் இரண்டாம் பகுதியையும் கூட்டுங்கள் 4000 + 221 = 4221 இதுதான் விடை 


உதாரணம் - 2 65 69 X -------- 4485 --------


 1.    அடிப்படை எண் 50 2.    இரு எண்களுமே 50ஐ விட பெரிய எண்கள் என்பதால் அந்த எண்களில் இருந்து 50ஐ கழிக்கப்போகின்றோம் ·       அடிப்படை எண் 50 ·       65லிருந்து 50ஐ கழித்தால் +15 ·      


 69லிருந்து 50ஐ கழித்தால் +19 ·       15ஐயும் 19ஐயும் பெருக்கினால் விடை 15X19 = 285. இது விடையின் முதல் பகுதி. ·      


 65டன் 19ஐ கூட்டினால் 65+19 = 84. அல்லது 69டன் 15ஐ கூட்டினால் 69+15 = 84. ·       84ஐ 100ஆல் பெருக்குங்கள். 84 x 100 = 8400 ·       2ஆல் வகுங்கள். 8400 / 2 = 4200 இது விடையின் இரண்டாம் பகுதி ·       


இனி விடையின் முதல் பகுதியையும் இரண்டாம் பகுதியையும் கூட்டுங்கள் 4200 + 285 = 4485 இதுதான் விடை


 உதாரணம் - 3 42 48X -------- 2016 --------


 1.    அடிப்படை எண் 50 2.    இரு எண்களுமே 50ஐ விட சிறிய எண்கள் என்பதால் 50ல் இருந்துஅந்த எண்களை கழிக்கப்போகின்றோம் ·       அடிப்படை எண் 50 ·       50லிருந்து 42ஐ கழித்தால் 8 ·       50லிருந்து 48ஐ கழித்தால் 2 ·       8ஐயும் 2ஐயும் பெருக்கினால் விடை 8X2 = 16. இது விடையின் முதல் பகுதி. ·      


 42லிருந்து 2ஐ கழித்தால் 42-2 = 40. அல்லது 48லிருந்து 2ஐ கழித்தால் 48-8 = 40. ·       40ஐ 100ஆல் பெருக்குங்கள். 40 x 100 = 4000 ·       2ஆல் வகுங்கள். 4000 / 2 = 2000 இது விடையின் இரண்டாம் பகுதி ·      


 இனி விடையின் முதல் பகுதியையும் இரண்டாம் பகுதியையும் கூட்டுங்கள் 2000 + 16 = 2016 இதுதான் விடை


 உதாரணம் - 4 44 49X -------- 2156 --------


 1.    அடிப்படை எண் 50 2.    இரு எண்களுமே 50ஐ விட சிறிய எண்கள் என்பதால் 50ல் இருந்துஅந்த எண்களை கழிக்கப்போகின்றோம் ·       அடிப்படை எண் 50 ·       50லிருந்து 44ஐ கழித்தால் 6 ·       50லிருந்து 49ஐ கழித்தால் 1 ·       6ஐயும் 1ஐயும் பெருக்கினால் விடை 6 X 1 = 6. இது விடையின் முதல் பகுதி. ·       


44லிருந்து 1ஐ கழித்தால் 44 - 1 = 43. அல்லது 49லிருந்து 6ஐ கழித்தால் 49 - 6 = 43. ·       43ஐ 100ஆல் பெருக்குங்கள். 43 x 100 = 4300 ·       2ஆல் வகுங்கள். 4300 / 2 = 2150 இது விடையின் இரண்டாம் பகுதி ·      


 இனி விடையின் முதல் பகுதியையும் இரண்டாம் பகுதியையும் கூட்டுங்கள் 2150 + 6 = 2156 இதுதான் விடை 


உதாரணம் - 5 59 48X -------- 2832 --------


 1.    அடிப்படை எண் 50 2.    59 என்பது அடிப்படை எண் 50ஐ விட பெரிய எண். எனவே 59 - 50 = 9 48 என்பது அடிப்படை எண் 50ஐ விட சிறிய எண் எனவே 48 - 50 = - 2 ·       அடிப்படை எண் 50 ·       59லிருந்து 50ஐ கழித்தால் 9 ·       48லிருந்து 50ஐ கழித்தால் -2 ·       9ஐயும் -2வையும் பெருக்கினால் விடை 9 X -2 = -18. இது விடையின் முதல் பகுதி. ·      


 48டன் 9ஐ கூட்டினால் 48 + 9 = 57. அல்லது 59டன் -2வை கூட்டினால் 59 + (-)2 = 57. ·       57ஐ 100ஆல் பெருக்குங்கள். 57 x 100 = 5700 ·       2ஆல் வகுங்கள். 5700 / 2 = 2850 இது விடையின் இரண்டாம் பகுதி ·     


  இனி விடையின் முதல் பகுதியையும் இரண்டாம் பகுதியையும் கூட்டுங்கள் 2850 + (-18) = 2832 இதுதான் விடை குறிப்பு : ·       மைனசும் பிளஸ்சும் சேர்ந்தால் அது மைனஸ் ஆகிவிடும். உதாரணமாக : 2850 + (-18) = 2850 - 19 = 2832 முயற்சி செய்து பாருங்கள் : 63 x 52 = ? 48 x 53 = ? 61 x 47 = ? 54 x 66 = ? 69 x 43 = ? 56 x 46 = ? 


உங்களது மேலான கருத்துக்களை எனக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள No Comments or Post a comment என்பதை கிலிக் செய்து எழுதுங்கள் - என்றும் அன்புடன் உங்கள்     SANKAR V
Today Deal $50 Off : https://goo.gl/efW8Ef