Wednesday, 26 October 2016
சரவணன் எண்ணங்கள்...: Electronic Voting Machine Election 2009 India EVM ...
சரவணன் எண்ணங்கள்...: Electronic Voting Machine Election 2009 India EVM ...: உங்களது மேலான கருத்துக்களை எனக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள No Comments or Post a comment என்பதை கிலிக் செய்து எழுதுங்கள் - என்றும் அன்புடன் ...
50க்கு அருகில் உள்ள எண்களை பெருக்குவது எப்படி?
50 என்பது 100/2 இதனை முதலில் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். மற்றவை எல்லாம் அதே உத்திதான். அதாவது 100க்கு அருகில் உள்ள எண்களுக்கு எந்த உத்தியை பயன்படுத்தினோமோ, அதையே செய்துவிட்டு, இரண்டால் வகுத்துவிட வேண்டும். ஒரு உதாரணத்தை பார்க்கலாமா?
உதாரணம் -1 63 67 X -------- 4221 --------
குறிப்பு :- 1. அடிப்படை எண் 50 2. இரு எண்களுமே 50ஐ விட பெரிய எண்கள் என்பதால் அந்த எண்களில் இருந்து 50ஐ கழிக்கப்போகின்றோம் · அடிப்படை எண் 50 · 63லிருந்து 50ஐ கழித்தால் +13 · 67லிருந்து 50ஐ கழித்தால் +17 · 13ஐயும் 17ஐயும் பெருக்கினால் விடை 13X17 = 221. இது விடையின் முதல் பகுதி. ·
63டன் 17ஐ கூட்டினால் 63+17 = 80. அல்லது 67டன் 13ஐ கூட்டினால் 67+13 = 80. · 80ஐ 100ஆல் பெருக்குங்கள். 80 x 100 = 8000 · 2ஆல் வகுங்கள். 8000 / 2 = 4000 இது விடையின் இரண்டாம் பகுதி ·
இனி விடையின் முதல் பகுதியையும் இரண்டாம் பகுதியையும் கூட்டுங்கள் 4000 + 221 = 4221 இதுதான் விடை
உதாரணம் - 2 65 69 X -------- 4485 --------
1. அடிப்படை எண் 50 2. இரு எண்களுமே 50ஐ விட பெரிய எண்கள் என்பதால் அந்த எண்களில் இருந்து 50ஐ கழிக்கப்போகின்றோம் · அடிப்படை எண் 50 · 65லிருந்து 50ஐ கழித்தால் +15 ·
69லிருந்து 50ஐ கழித்தால் +19 · 15ஐயும் 19ஐயும் பெருக்கினால் விடை 15X19 = 285. இது விடையின் முதல் பகுதி. ·
65டன் 19ஐ கூட்டினால் 65+19 = 84. அல்லது 69டன் 15ஐ கூட்டினால் 69+15 = 84. · 84ஐ 100ஆல் பெருக்குங்கள். 84 x 100 = 8400 · 2ஆல் வகுங்கள். 8400 / 2 = 4200 இது விடையின் இரண்டாம் பகுதி ·
இனி விடையின் முதல் பகுதியையும் இரண்டாம் பகுதியையும் கூட்டுங்கள் 4200 + 285 = 4485 இதுதான் விடை
உதாரணம் - 3 42 48X -------- 2016 --------
1. அடிப்படை எண் 50 2. இரு எண்களுமே 50ஐ விட சிறிய எண்கள் என்பதால் 50ல் இருந்துஅந்த எண்களை கழிக்கப்போகின்றோம் · அடிப்படை எண் 50 · 50லிருந்து 42ஐ கழித்தால் 8 · 50லிருந்து 48ஐ கழித்தால் 2 · 8ஐயும் 2ஐயும் பெருக்கினால் விடை 8X2 = 16. இது விடையின் முதல் பகுதி. ·
42லிருந்து 2ஐ கழித்தால் 42-2 = 40. அல்லது 48லிருந்து 2ஐ கழித்தால் 48-8 = 40. · 40ஐ 100ஆல் பெருக்குங்கள். 40 x 100 = 4000 · 2ஆல் வகுங்கள். 4000 / 2 = 2000 இது விடையின் இரண்டாம் பகுதி ·
இனி விடையின் முதல் பகுதியையும் இரண்டாம் பகுதியையும் கூட்டுங்கள் 2000 + 16 = 2016 இதுதான் விடை
உதாரணம் - 4 44 49X -------- 2156 --------
1. அடிப்படை எண் 50 2. இரு எண்களுமே 50ஐ விட சிறிய எண்கள் என்பதால் 50ல் இருந்துஅந்த எண்களை கழிக்கப்போகின்றோம் · அடிப்படை எண் 50 · 50லிருந்து 44ஐ கழித்தால் 6 · 50லிருந்து 49ஐ கழித்தால் 1 · 6ஐயும் 1ஐயும் பெருக்கினால் விடை 6 X 1 = 6. இது விடையின் முதல் பகுதி. ·
44லிருந்து 1ஐ கழித்தால் 44 - 1 = 43. அல்லது 49லிருந்து 6ஐ கழித்தால் 49 - 6 = 43. · 43ஐ 100ஆல் பெருக்குங்கள். 43 x 100 = 4300 · 2ஆல் வகுங்கள். 4300 / 2 = 2150 இது விடையின் இரண்டாம் பகுதி ·
இனி விடையின் முதல் பகுதியையும் இரண்டாம் பகுதியையும் கூட்டுங்கள் 2150 + 6 = 2156 இதுதான் விடை
உதாரணம் - 5 59 48X -------- 2832 --------
1. அடிப்படை எண் 50 2. 59 என்பது அடிப்படை எண் 50ஐ விட பெரிய எண். எனவே 59 - 50 = 9 48 என்பது அடிப்படை எண் 50ஐ விட சிறிய எண் எனவே 48 - 50 = - 2 · அடிப்படை எண் 50 · 59லிருந்து 50ஐ கழித்தால் 9 · 48லிருந்து 50ஐ கழித்தால் -2 · 9ஐயும் -2வையும் பெருக்கினால் விடை 9 X -2 = -18. இது விடையின் முதல் பகுதி. ·
48டன் 9ஐ கூட்டினால் 48 + 9 = 57. அல்லது 59டன் -2வை கூட்டினால் 59 + (-)2 = 57. · 57ஐ 100ஆல் பெருக்குங்கள். 57 x 100 = 5700 · 2ஆல் வகுங்கள். 5700 / 2 = 2850 இது விடையின் இரண்டாம் பகுதி ·
இனி விடையின் முதல் பகுதியையும் இரண்டாம் பகுதியையும் கூட்டுங்கள் 2850 + (-18) = 2832 இதுதான் விடை குறிப்பு : · மைனசும் பிளஸ்சும் சேர்ந்தால் அது மைனஸ் ஆகிவிடும். உதாரணமாக : 2850 + (-18) = 2850 - 19 = 2832 முயற்சி செய்து பாருங்கள் : 63 x 52 = ? 48 x 53 = ? 61 x 47 = ? 54 x 66 = ? 69 x 43 = ? 56 x 46 = ?
உங்களது மேலான கருத்துக்களை எனக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள No Comments or Post a comment என்பதை கிலிக் செய்து எழுதுங்கள் - என்றும் அன்புடன் உங்கள் SANKAR V
Today Deal $50 Off : https://goo.gl/efW8Ef
Labels:
BE BOLD
Location:
Villupuram, Tamil Nadu, India
OPERATE ANY COMPUTER AT YOUR HOME
நம் வீட்டில் இருந்தபடி பிறகணினியை இயக்க – TEAM VIEWER நம் வீட்டில் இருக்கும் கணினியில் அமர்ந்து கொண்டே வெளி நாட்டில் இருக்கும் நம் நண்பரின் கணினியை இயக்க முடியும். ஆம் இதற்கு தேவையான மென்பொருள் Team Viewer ஆகும். ஆம் Remote Control வசதியை இலவசமாக வழங்கும் Team Viewer மென்பொருள் பற்றி நாம் தெறிந்துகொள்ளவேண்டும். நம் வீட்டில் இருந்தபடியே நம் நண்பரின் கணினியில் ஒரு மென்பொருளை இயக்கி அவருக்கு அந்த மென்பொருளில் சந்தேகங்களை நீக்கமுடியும். அவருடைய பிரச்சனைகளை நம் வீட்டில் இருந்தபடியே தீர்க்கமுடியும். ஆம் இதற்கு தேவை TEAM VIEWER மென்பொருள். இந்த மென்பொருளை http://www.teamviewer.com என்ற இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். பிறகு இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். இன்ஸ்டால் செய்யும் போது Non-Commercial Use என்பதை தெரிவு செய்துகொள்ளவேண்டும். பயன்படுத்தும் முறை நாம் தொடர்புகொள்ள விரும்பும் நண்பரையும் மேற்கண்டமுறையில் இன்ஸ்டால் செய்துகொள்ளச் சொல்லவேண்டும் பிறகு இணைய இணைப்பில் இருக்கும்போது Team Viewer-ஐ ஓபன் செய்யுங்கள் கீழ்கண்ட படத்தில் உள்ளது போல நமக்கு என்று YOUR ID மற்றும் Password உருவாகியிருப்பதை பார்க்கலாம். உங்களுடை ID & Password ஐ உங்கள் நண்பருக்கு போன்மூலமோ CHATTING மூலமோ தெரிவித்து அவருடைய ID மற்றும் Password ஐ தெறிந்துகொண்டு Partner ID என்ற இடத்தில் கொடுத்து Connect To Partner என்று கொடுத்து பிறகு வரும் பெட்டியில் Password ஐ கொடுத்து அவரது கம்ப்யூட்டரின் Desktop க்கு செல்லுங்கள். இதில் File Transfer என்பதை பயன்படுத்தி File களை உங்கள் நண்பர் கம்ப்யூட்டரில் இருந்து Transfer செய்ய உதவும். அவரது கம்ப்யூட்டருக்கும் File களை Transfer செய்யலாம். பயன்படுத்தி மகிழுங்கள்.
உங்களது மேலான கருத்துக்களை எனக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள No Comments or Post a comment என்பதை கிலிக் செய்து எழுதுங்கள் - என்றும் அன்புடன் உங்கள் SANKAR V
Today Deal $50 Off : https://goo.gl/efW8Ef
Subscribe to:
Posts (Atom)
